சனி, 22 மார்ச், 2014

40 தொகுதிகளிலும் அவுங்க (ஜெயலலிதா) தோற்பார்கள்! வைகோ பேட்டி!


 

மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமை காலை சென்னையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 


ஜெயலலிதா விருதுநகரில் நேற்று பேசியிருக்கிறார். இந்த தேர்தல் களத்தில் பல கட்சிகள் போட்டியிடும். பல கட்சிகள் ஓட்டு கேட்டு வருவார்கள். அவர்களுக்கு நீங்கள் ஓட்டு போடுவதினால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. நீங்கள் ஓட்டுப்போடுவதினால் அவர்கள் ஜெயிக்கப்போவதும் இல்லை. உங்கள் ஓட்டு வீணாகிப் போய்விடக் கூடாது. ஜெயலலிதா இந்த கருத்தை சொல்ல பரிபூரண உரிமையும், சுதந்திரமும் உண்டு. நான் அதை விமர்சிக்கவில்லை.

ஆனால், மற்ற கட்சிகள் எல்லாம் போட்டிப்போடுவார்கள். ஓட்டு கேட்பார்கள். அவர்களுக்கு ஓட்டு போடுவது வீண். அவர்கள் ஜெயிக்கப்போவதும் இல்லை. போட்டியிடும் கட்சிகள் ஜெயிக்காது என்று சொல்லுவது... நான் கூட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று சொல்லுகிறேன். அதையே அவர்கள் சொல்லுகிற வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், 40 தொகுதிகளிலும் அவுங்க (ஜெயலலிதா) தோற்பார்கள் என்று அர்த்தம். அதுமட்டுமல்ல திமுகவும் தோற்கும் என்று அர்த்தம். நான் அப்படி சொல்லவில்லை. நான் பாசிட்டிவா சொல்கிறேன். அவர்கள் நெகட்டிவா சொல்றாங்க. இரண்டும் ஒரே கருத்துதான் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக