வெள்ளி, 21 மார்ச், 2014

தொகுதி கண்ணோட்டம் : சேலம் தொகுதி



சேலம் பாராளுமன்ற தொகுதியில் சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூர், இடைப்பாடி மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. தொகுதி சீரமைப்புக்கு பின்னர், 2009–ம் ஆண்டு நடந்த தேர்தலில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செம்மலை போட்டியிட்டு 3 லட்சத்து 80 ஆயிரத்து 460 வாக்குகள் பெற்று எம்.பி. ஆனார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்கபாலு 3 லட்சத்து 33 ஆயிரத்து 969 வாக்குகள் பெற்றார்.
6 சட்டமன்ற தொகுதிகள்

சேலம் பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளும் தற்போது எந்தெந்த கட்சிகள் வசம் உள்ளன? அவற்றின் எம்.எல்.ஏ.க்கள் விவரம் வருமாறு:–
சேலம் மேற்கு– ஜி.வெங்கடாசலம்(அ.தி.மு.க.)
சேலம் வடக்கு–
அழகாபுரம் மோகன்ராஜ்(தே.மு.தி.க.)
சேலம் தெற்கு– எம்.கே.செல்வராஜ்(அ.தி.மு.க.)
ஓமலூர்–பல்பாக்கி கிருஷ்ணன்(அ.தி.மு.க.)
இடைப்பாடி– இடைப்பாடி பழனிசாமி(அ.தி.மு.க.)
வீரபாண்டி– எஸ்.கே.செல்வம்(அ.தி.மு.க.)
14.65 லட்சம் வாக்காளர்கள்
கடந்த 10.1.2014 அன்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி சேலம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 65 ஆயிரத்து 644 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள்–7,43,635. பெண்கள்–7,21,898. திருநங்கைகள்–111 பேர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலை விட இப்போது கூடுதலாக 3 லட்சத்து 2 ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளனர்.
சேலம் பாராளுமன்ற தொகுதியில் பெரும்பான்மையினராக வன்னியர், வெள்ளாளக்கவுண்டர், எஸ்.சி.எஸ்.டி.பிரிவினர், முதலியார், செட்டியார், சவுராஷ்டிரா சமூகத்தினர் உள்ளனர். மேலும் நாடார், ரெட்டியார், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் உள்ளனர்.
சேலம் தொகுதியில் விவசாயம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி, கைத்தறி, விசைத்தறி நூற்பாலைகள், வெள்ளிக்கொலுசு பட்டறைகள், இரும்பாலை, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் மாக்னசைட் தொழில்களும் நடந்து வருகிறது.
செம்மலை எம்.பி. பேட்டி
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து செம்மலை எம்.பி. கூறியதாவது:–
‘கடந்த 2009–ம் ஆண்டு நடந்த எம்.பி. தேர்தலின்போது, சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரெயில்வே மேம்பாலங்கள் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தேன். அதன்படி, பழைய சூரமங்கலம், செவ்வாய்பேட்டை லீ பஜார், முள்ளுவாடி கேட் மற்றும் அணைமேடு ஆகிய 4 இடங்களில் மேம்பாலம் அமைப்பதற்கு மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் நிதிஒதுக்கப்பெற்று பணிகள் நடந்து வருகிறது. மத்திய அரசின் நிதிக்கு சமமான நிதியை, மாநில அரசும் வழங்குவதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
கடந்த 40 ஆண்டுகளாக பூலாம்பட்டியில் இருந்து சேலம் இரும்பாலைக்கு வரும் 30 கிலோமீட்டர் சாலை பராமரிப்பின்றி மிகவும் குண்டும், குழியுமாக கிடந்தது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதன் விளைவாக, மத்திய எக்குத்துறை அமைச்சகம் சாலை போடுவதற்கான ஒப்புதல் அளித்தது. தற்போது அந்த பணியும் பாதிக்குமேல் முடிந்து விட்டது.
சேலம் மாநகருக்கான தனிக்குடிநீர் பிரச்சினையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலையோரம் குழாய் பதிக்க அனுமதி அளிக்காமல் இருந்தது. அதை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று மத்திய அரசின் அனுமதி பெற்று கொடுத்தேன்.
போடிநாயக்கன்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தாமதப்பட்டது. ரெயில்வே நிர்வாகம், இதற்கு சேலம் மாநகராட்சிதான் பணம் ஒதுக்க வேண்டும் எனக்கூறி கைவிரித்து விட்டது. மாநகராட்சியிலும் பணம் இல்லாத நிலையில், தமிழக உள்ளாட்சித்துறையிடம் பேசியதன் மூலம் ரூ.2½ கோடி வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் பணி தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி யாருக்கு?
சேலம் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 1952–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், தி.மு.க. 3 முறையும், த.மா.க. ஒரு முறையும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 7 முறை வென்றதில், 3 முறை தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளது. மீதம் 4 முறை கூட்டணி கட்சிகளை வைத்தே வெற்றிக்கனியை பறித்துள்ளது.
இதேபோல அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தலா 3 முறை இந்த தொகுதியை கைப்பற்றி உள்ளன.
சேலம் பாராளுமன்ற தொகுதி கடந்த 1952–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டுவரை 15 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த தேர்தல்களின் முடிவுகள் வருமாறு:–
1952 (காங்கிரஸ் வெற்றி)
எஸ்.வி.ராமசாமி(காங்)–90,570
துரை கே.பிள்ளை(சுயே)–79,705
1957 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த ஓட்டுகள்–4,01,741
எஸ்.வி.ராமசாமி(காங்)–85,342
கே.பி.கந்தசாமி(சுயே)–30,674
கணேசசங்கரன்(சுயே)–25,529
1962 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த ஓட்டுகள்–4,40,434
எஸ்.வி.ராமசாமி(காங்)–1,47,525
ராஜகோபால்(தி.மு.க.)–1,35,787
1967 (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்–5,20,373
க.ராசாராம்(தி.மு.க.)–2,19,380
ராமகிருஷ்ணன்(காங்)–1,55,871
1971 (தி.மு.க.வெற்றி)
மொத்த ஓட்டுகள்–5,96,531
இ.ஆர்.கிருஷ்ணன்(தி.மு.க.)–2,30,736
எம்.பி.சுப்பிரமணியம்(ப.காங்)–1,75,940
1977 (அ.தி.மு.க.வெற்றி)
மொத்த ஓட்டுகள்–6,77,947
கண்ணன்(அ.தி.மு.க.)–2,54,138
க.ராசாராம்(தி.மு.க.)–1,74,534
1980 (தி.மு.க.வெற்றி)
மொத்த ஓட்டுகள்–6,91,389
சி.பழனியப்பன்(தி.மு.க.)–2,33,971
கண்ணன்(அ.தி.மு.க.)–2,07,713
1984 (இ.காங்.வெற்றி)
மொத்த ஓட்டுகள்–7,66,792
ரங்கராஜன் குமாரமங்கலம்(இ.காங்)–3,59,819
கந்தசாமி(ஜனதா)–1,23,644
1989 (இ.காங் வெற்றி)
மொத்த ஓட்டுகள்–10,32,283
ரங்கராஜன்குமாரமங்கலம்(இ.காங்)–4,00,936
கார்த்தியேகன்–(தி.மு.க.)–1,59,166
சதாசிவம்–(பா.ம.க.)–85,628
1991 (இ.காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள்–10,30,128
ரங்கராஜன் குமாரமங்கலம்(இ.காங்)–4,06,042
அர்த்தநாரிசாமி(தி.மு.க.)–1,23,474
அர்ச்சுனன்(பா.ம.க.)–56,775
ராமநாதன்(பா.ஜனதா)–7,867
1996 (த.மா.கா.வெற்றி)
மொத்த ஓட்டுகள்–10,80,762
தேவதாஸ்(த.மா.கா)–3,15,277
தங்கபாலு(இ.காங்)–1,94,392
ரங்கராஜன்(வாழப்பாடி காங்)–1,20,345
ராஜாமணி(பா.ஜனதா)–9,538
மோகன்ராஜ்(ம.தி.மு.க.)–6,245
1998 (தமிழக ராஜீவ் காங்.வெற்றி)
மொத்த ஓட்டுகள்–11,78,177
வாழப்பாடி ராமமூர்த்தி(த.ரா.காங்)–3,65,557
தேவதாஸ்(த.மா.கா.)–2,29,677
தங்கபாலு(இ.காங்)–48,027
1999 (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்–12,57,383
டி.எம்.செல்வகணபதி(அ.தி.மு.க.)–3,63,689
வாழப்பாடி ராமமூர்த்தி
(த.ரா.காங்–தி.மு.க.கூட்டணி)–3,38,278
தேவதாஸ்(த.மா.கா.)–19,604
2004 (இ.காங்.வெற்றி)
மொத்த ஓட்டுகள்–12,51,191
கே.வி.தங்கபாலு
(காங்–தி.மு.க.கூட்டணி)–4,44,591
ஏ.ராஜசேகரன்(அ.தி.மு.க.)–2,68,964
2009 (அ.தி.மு.க.வெற்றி)
மொத்த ஓட்டுகள்–11,71,839
செம்மலை(அ.தி.மு.க.)–3,80,460
கே.வி.தங்கபாலு(காங்)–3,33,969
ஆர்.மோகன்ராஜ்(தே.மு.தி.க.)–1,20,325
செல்லத்துரை(கொ.இ.பே)–23,056.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக