சனி, 22 மார்ச், 2014

தேர்வு கட்டணம் செலுத்தாதல் வகுப்புக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியை: தூக்கில்தொங்கிய மாணவி

சென்னையில் மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்தவர் மாறன். இவர் அருகில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பொற்கொடி. இவர்களுடைய மகள் பூஜா (13). மணலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று தேர்வு கட்டணம் செலுத்தவில்லை. இது குறித்து கேள்வி கேட்ட ஆசிரயை  உடனே தேர்வு கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். அப்போது. தனது தந்தைக்கு கூலி கிடைத்தவுடன் வரும் திங்கள் அன்று தேர்வு கட்டணம் கட்டிவிடுவதாக பூஜா கூறினார்.
 இந்நிலையில் தேர்வு கட்டணம் செலுத்தாததால் பூஜாவை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த பூஜா, பள்ளியில் நடந்த சம்பவத்தை அவரது அம்மா பொற்கொடியிடம் கூறி அழுதுள்ளார். அவரை சமாதனப்படுத்திய பொற்கொடி, பின்னர் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார்.
இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூஜா தூக்கில் தொங்குவதை பார்த்து பொற்கொடி அலறினார்.  உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பூஜாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பூஜா இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதகைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மகள் சாவுக்கு காரணமான அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணலி போலீசில்  மாறன் புகார் செய்துள்ளார். பள்ளி சிறுமி தறகொலை செய்து கொண்ட சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக