வெள்ளி, 21 மார்ச், 2014

நாங்கள் சவால் விடுகிறோம்/துரைமுருகன்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான திமுக செயல்வீர்ர்கள் கூட்டம் தனியார் மண்டபம் ஒன்றில் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, வேலூர் மா.செ காந்தி போன்றோர் கலந்துக்கொண்டு திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் அண்ணாதுரையை அறிமுகப்படுத்தி பேசினர்.

கூட்டத்தில் துரைமுருகன் பேசும்போது, 
மோடி அலை, மோடி அலை என்கிறார்கள். என் கேள்வி என்னவென்றால் குஜராத்தின் முதல்வராக உள்ள மோடி, வளர்ச்சி பெற்ற மாநிலம் என தம்பட்டம்மடிக்கும் மோடி, தன் மாநிலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்காமல் எதற்கு உத்திரபிரதேசத்தின் வாரணாசியில் போய் நிற்கிறார். அந்த தொகுதி சந்நியாசிகளும், நிர்வாண சாமியார்களும் உலாவும் பகுதி அங்கு ஏன் நிற்க வேண்டும்? 
அதுமட்டுமா பாஜகவின் முக்கிய தலைவராக உள்ள அத்வானி எதற்கு ஜராத்தின் காந்திநகரை விட்டுவிட்டு மத்தியபிரதேசத்தின் போபால் தொகுதியில் போய் நிற்க ஆசைப்படுகிறார். ஏன் என்றால் குஜராத் கலவரம் அந்தளவுக்கு பி.ஜே.பியினரை துன்புறுத்துகிறது, வெற்றி பெறமாட்டோம் என்பதாலே வேறு தொகுதியை நாடி ஓடுகிறார்கள். நாட்டில் மோடி அலை என்பது இல்லை. அது ஜோடிக்கப்பட்ட பிம்பம்.
குவாலியர் சமஸ்தானத்தில் உள்ள மகாராணிக்காக கட்டப்பட்ட அரண்மனைக்கு மிக அருகாமையில் மகாராணி பொழுது போக்க வேண்டி ஒரு அரண்மனை கட்டியுள்ளார்கள். அது தற்போது ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. அதில் போய் தங்கினேன். அங்கிருந்து மகாராணிக்கான அந்த மிக பிரமாண்டமான, பெரிய அரண்மனையை கண்டேன். அந்த அரண்மனையின் மகாராணி யார் என்றால் இப்போது மத்திய பிரதேசத்தின் முதல்வராக உள்ள வசுந்தரா ராஜே. அவர் தேர்தல் நேரத்தில் சாதாரண தெருவோர டீ கடையில் நின்று டீ குடிப்பதை பார்த்தேன். 
ஆனால் இங்கு முதல்வராக உள்ளவர் ஜனநாயகத்தை கேலி கூத்தாகுகிறார். இந்த நாட்டின் ஜனநாயகம் மிகப்பெரியது. எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் தேர்தலின் போது மக்களிடம் சென்று தான் ஆக வேண்டும். நாங்கள் சவால் விடுகிறோம். இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளைவிட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தொகுதிகளில் அதிகவாக்கு வாங்கி தருகிறோம். இது எங்கள் சவால் என்றார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான திமுக செயல்வீர்ர்கள் கூட்டம் தனியார் மண்டபம் ஒன்றில் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, வேலூர் மா.செ காந்தி போன்றோர் கலந்துக்கொண்டு திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் அண்ணாதுரையை அறிமுகப்படுத்தி பேசினர்.
கூட்டத்தில் துரைமுருகன் பேசும்போது, 
மோடி அலை, மோடி அலை என்கிறார்கள். என் கேள்வி என்னவென்றால் குஜராத்தின் முதல்வராக உள்ள மோடி, வளர்ச்சி பெற்ற மாநிலம் என தம்பட்டம்மடிக்கும் மோடி, தன் மாநிலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்காமல் எதற்கு உத்திரபிரதேசத்தின் வாரணாசியில் போய் நிற்கிறார். அந்த தொகுதி சந்நியாசிகளும், நிர்வாண சாமியார்களும் உலாவும் பகுதி அங்கு ஏன் நிற்க வேண்டும்? 
அதுமட்டுமா பாஜகவின் முக்கிய தலைவராக உள்ள அத்வானி எதற்கு ஜராத்தின் காந்திநகரை விட்டுவிட்டு மத்தியபிரதேசத்தின் போபால் தொகுதியில் போய் நிற்க ஆசைப்படுகிறார். ஏன் என்றால் குஜராத் கலவரம் அந்தளவுக்கு பி.ஜே.பியினரை துன்புறுத்துகிறது, வெற்றி பெறமாட்டோம் என்பதாலே வேறு தொகுதியை நாடி ஓடுகிறார்கள். நாட்டில் மோடி அலை என்பது இல்லை. அது ஜோடிக்கப்பட்ட பிம்பம்.
குவாலியர் சமஸ்தானத்தில் உள்ள மகாராணிக்காக கட்டப்பட்ட அரண்மனைக்கு மிக அருகாமையில் மகாராணி பொழுது போக்க வேண்டி ஒரு அரண்மனை கட்டியுள்ளார்கள். அது தற்போது ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. அதில் போய் தங்கினேன். அங்கிருந்து மகாராணிக்கான அந்த மிக பிரமாண்டமான, பெரிய அரண்மனையை கண்டேன். அந்த அரண்மனையின் மகாராணி யார் என்றால் இப்போது மத்திய பிரதேசத்தின் முதல்வராக உள்ள வசுந்தரா ராஜே. அவர் தேர்தல் நேரத்தில் சாதாரண தெருவோர டீ கடையில் நின்று டீ குடிப்பதை பார்த்தேன். 
ஆனால் இங்கு முதல்வராக உள்ளவர் ஜனநாயகத்தை கேலி கூத்தாகுகிறார். இந்த நாட்டின் ஜனநாயகம் மிகப்பெரியது. எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் தேர்தலின் போது மக்களிடம் சென்று தான் ஆக வேண்டும். நாங்கள் சவால் விடுகிறோம். இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளைவிட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தொகுதிகளில் அதிகவாக்கு வாங்கி தருகிறோம். இது எங்கள் சவால் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக